சிறு வயதிலிருந்தே யாராலும் உண்மையை மட்டுமே பேசி வளர்ந்திருக்க முடியாது. ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொய்யின் உதவியை நாடியிருப்போம். பொய்யின் உதவியால் பல தருணங்களில் பல்வேறு பிரச்சனைகளில் மாட்டியிருப்போம் அல்லது தப்பித்திருப்போம்.
நானெல்லாம் பொய்யின் வீட்டிலேயே குடியேறியிருந்தேன். என்ன பாக்குறீங்க? நானே தான். நிறைய பொய்யிருக்கும். நினைவு தெரிந்த நாளில் இருந்து வயதிற்கு ஏற்றது போல, சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல பொய்கள் வேறுபட்டிருக்கும். இப்பொழுது யோசித்தால் எதற்க்காக இந்த பொய்யின் உதவியை நாடினேன் என்றால் வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றது. இதில் பயமே முதல் காரணம்.
நினைவு தெரிந்து ஒரு எட்டு ஒன்பது வயதிலிருந்து பொய் சொல்லியிருப்பேன். பொய் சொன்ன முதல் சம்பவம் இதிலிருந்தே நியாபகம் இருக்கிறது. சைக்கிள் ஓரளவு ஓட்டிப் பழகியிருந்த தருணம். என் தாத்தாவின் சைக்கிள், ஹெர்குலஸ் பெரியது அதுவும் தண்டியுடன். நானோ இரண்டு அடி இருந்திருப்பேன். சைக்கிளோ மூன்று அடி இருக்கும். அப்பொழுது தான் குரங்கு பெடல் ஓட்ட கற்றிருந்த சமயம்.
பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் சைக்கிள் ஓட்டுவது தான் முதல் வேலை. அன்று என் பள்ளித் தோழர்களான சதீஸ், பிரபாகரன் மற்றும் கௌசல்யா அனைவரும் சேர்ந்து என் உயிர் தோழனான பிரகாஷ் வீட்டிற்கு செல்வதாக திட்டமிட்டிருந்தார்கள். சைக்கிளில் செல்வதால் என்னை அழைக்கவில்லை. நான் குரங்கு பெடல் தானே. நானும் எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.
வீட்டிற்கு வந்தால் எருமைகளுக்கு புல்லறுக்க அம்மா செல்வதால் தங்கையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு எப்பொழுதும் போல என் தலையில் விழுந்தது. என் தங்கைக்கு அப்பொழுது 3 அல்லது 4 வயதிருக்கும். இப்பொழுது அவளை என்ன செய்வது என்று யோசித்து யோசித்து, சரி அவளையும் அழைத்துக்கொண்டே சென்றால் என்ன என்று முடிவெடுத்தேன். சைக்கிளை சாலை ஓரமாக நிறுத்தி அவளை கஷ்டப்பட்டு தூக்கி உட்கார வைத்தேன். அருகில் கோணப்புளியாங்கா மரம் வெட்டப்பட்டு முட்களோடு விறகுக்காக போடப்பட்டிருந்தது.
முதல் முறை டபுள்ஸ். சைக்கிள் ஸ்டாண்டை எடுத்துவிட்டு ஒரு வழியா மொத்த பாரத்தைத் தாங்கி காலை பெடலில் வைத்து நகர்த்தும்போது நிலை தடுமாறி சைக்கிள் என் பிடியில் இருந்து தப்பித்தது. ஒரு கனம் மூச்சே நின்றது போல் ஆனது. நான் ரோட்டிலும், சைக்கிள் முள் மீதும், என் தங்கை முள்ளுக்கும் சைக்கிளுக்கு நடுவிலும் கிடந்தோம்.
எல்லாம் கெட்டது போ என்று வேக வேகமாக அவளையும், சைக்கிளையும் தூக்குவதற்குள் அவள் அழுது ஊரைக் கூட்டத் தொடங்கியிருந்தாள். அய்யோ செத்தேன் என்று யாரும் வருவதற்குள் அவளை தூக்கி நிறுத்தி கெஞ்ச ஆரம்பித்தேன். அழுகையை நிறுத்த தவுசாயி அம்மாயி கடைக்குக் கூட்டிச் சென்று தேன் மிட்டாயும், எலந்த பொடியும் வாங்கிக் கொடுத்து சமாதானம் செய்தேன்.
இனி தான் பிரச்சனையே ஆரம்பம். அம்மாவிடம் இதை சொல்லக்கூடாது என்று கெஞ்சி, அதற்காக தினமும் அவள் கேட்கும் மிட்டாய் வாங்கித் தருவதாக பேரம் பேசி முடித்தேன். இங்கு தான் பொய் சொல்ல ஆரம்பித்திருப்பதாக நினைவிருக்கிறது. இன்று வரை பொய் சொல்வது மிக எளிதாகவும், ஒரு வழக்கமாகவும் மாறிவிட்டிருக்கிறது.
இந்த பொய் கூறும் பழக்கம் நிறைய நேரம் கைவிட்டிருக்கிறது. சில நேரங்களில் மட்டுமே காப்பாற்றியிருக்கிறது. ஒரு பொய் கூற ஆரம்பித்து, அதை காப்பாற்ற பல பொய்கள் கூற வேண்டியிருந்தது. செய்த தவறில் இருந்து தப்பிக்க பொய் சொல்ல ஆரம்பித்து, அம்மாவை கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காக அதை தொடர்ந்து, சுதந்திரத்தை அனுபவிப்பதற்காகவும், தேவையற்ற கேள்விகளைத் தவிர்க்கவும், பெண்ணிற்கு இருக்கும் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிக்கவும் பயன்படுத்திக் கொண்டேன்.
இந்த பொய்யின் உதவியால் ஒரு கட்டத்தில் என் சுயத்தை வீட்டில் இழந்திருந்தேன். நான் அல்லாத வேறொரு பிம்பத்தை என் வீட்டில் வளர்த்திருந்தேன். அதற்காக நிறைய நடிக்க வேண்டியிருந்தது. இந்த பிம்பம் உடையும்பொழுது அதை என் பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் இந்த பொய் கூறுவதை நிறுத்தி உண்மையை கையாண்டு நிம்மதியோடு வாழ வேண்டும் என்று தோன்றியது. உண்மை பேசுவதால், எங்கே மாட்டிக்கொள்வோமோ என்ற பயம் இருக்காது. நம் சுயத்தை அறிந்த உறவுகளும், நட்புமே உடனிருக்கும்.
இன்று அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி. காந்தியைப் பற்றி சிறு வயதிலிருந்தே ஒரு மோசமான பிம்பம் என் மனதில் விதைக்கப் பட்டிருந்தது. இது நாள் வரை அது தொடர்ந்து கொண்டிருந்தது. இனி அவர் விட்டு சென்ற நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு யாரையும் வெறுக்காமல் இந்த வாழ்க்கையை உண்மையோடு வாழ முடிவெடுத்துள்ளேன். இனி முடிந்த வரை பொய்யின் உதவியை நாடாமல் இந்த அழகான வாழ்க்கையை தொடர போகிறேன்.
இந்த வயதிலுமா பொய் கூறுகிறீர்கள் என்றால் ஆம். மலையேற்றம் செல்லும்போது, தனிப் பயணம் மேற்கொள்ளும்போது, நிகழ்வுகளுக்கு செல்லும்போதும் வீட்டில் சொல்வதில்லை. மறைப்பதற்காக அல்ல தேவையில்லாத கேள்விகளையும், அச்சங்களையும் தவிர்ப்பதற்காக. என் பொய்யின் ஆரம்பமும், ஆணிவேருமாய் இருப்பது பயம். பின் பெண் என்பதால் ஏற்படும் சுதந்திரமின்மை, அடக்குமுறை ஆகியவற்றில் இருந்து தப்பிக்க எடுத்துக் கொண்ட ஆயுதம். இனி இவை அனைத்தையும் உண்மையைக் கொண்டு கையாளப் பழக வேண்டும்.
ஓ மறந்தே போய்விட்டேன். எங்கு கீழே விழுந்தாய் என்று அம்மா என் தங்கையிடம் கேட்க, அவளுக்கு பொய் சொல்ல தெரியாமல், திக்கி திக்கி உண்மையை போட்டு உடைத்து என் தோலை உரித்து தொங்கவிடுவதை பார்த்துக்கொண்டே இலந்தை பொடியை நக்கிக் கொண்டிருந்தாள். ஒரு வாரம் சைக்கிளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
கடைசியாக ஒரு கருத்து. உண்மை நம்மை காப்பாற்றும். பொய்யை நாம் காப்பாற்ற வேண்டும்.

Nice One akka.. Good Narration!!!
ReplyDeleteஅருமை!!!
ReplyDelete