எங்கள் வீட்டில் ஒரு அழகான சிறிய கிணறு இருந்தது. வீட்டிற்கு இருபத்தி நான்கு மணி நேரமும் தண்ணீர் சேவையை இலவசமாக வழங்கிக்கொண்டிருந்தது. அழகான சதுர வடிவம் கொண்ட கிணற்றின் இருபக்கமும் இரண்டடி உயரமுள்ள பெரிய தூண்கள். அதை இணைத்து மரத்தால் ஆன ஒரு சட்டமும், அதில் எப்பொழுதும் நீர் இறைக்க ஒரு உருளையும் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும்.
பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் ஊரில் காவிரியாற்றின் நீரை பெரிய குழாய்களின் மூலமாக கொண்டு வந்து கிராமங்களில் வீட்டுக்கு வீடு நீர் வழங்கும் திட்டம் எதுவும் வந்திருக்கவில்லை. ஊரின் நுழைவாயில் அருகில் ஒரு பொது கிணறு. அதனருகில் ஒரு ஆழ்துளைக் கிணறும் ஒரு பெரிய தண்ணீர் தொட்டியும் இருக்கிறது. இதன் மூலம் தான் ஊருக்குள் தண்ணீர் வழங்கப்படும். எந்த க்ளோரினும் கலக்காமல் சுத்தமான நீர்.
வீதிக்கு ஒரு தண்ணீர் குழாய். அது போல வீதிக்கு ஒரு வீட்டிலாவது ஒரு கிணறு இருக்கும். இந்த கிணறுகள் எங்களை எப்பொழுதும் நீருக்காக திண்டாட வைத்ததில்லை. குடத்தை தூக்கிக் கொண்டு சாலை மறியல் செய்ய வைத்ததில்லை. முக்கியமாக இந்த நீரால் முடி கொட்டியதில்லை. ஒரு வாளித் தண்ணீரை இறைத்து கையில் அள்ளி எடுக்காமல் அப்படியே வாய் வைத்து குடிக்கும் சுகமே தனி. என்ன பெரிய ஐஸ் தண்ணி, ஜூஸ். எங்க கிணத்து தண்ணி கிட்ட பிச்சை எடுக்கணும்.
இருபதிலிருந்து இருபத்தைந்து அடி வரை ஆழமிருக்கும் எங்கள் கிணறு கோடை காலத்தில் மட்டும் நீர் குறைந்து ஒரு மாதம் வறண்டு அதன் அருமையை எங்களுக்கு புரிய வைக்கும். மழை காலங்களில் நீர் நிரம்பி வழிவதை பார்ப்பதற்கு அவ்வளவு ஆனந்தமாய் இருக்கும். அருகிலுள்ள அனைவரின் தண்ணீர் தேவையை இந்த தேவதை தீர்த்து வைத்துக்கொண்டே இருந்தாள். உருளையில் எப்பொழுதும் கயிறும், வாளியும் இணைந்தே இருக்கும்.
எங்கள் வீட்டிற்கு எதிரில் கண்ணாடி ஆயாவின் வீடு இருந்தது. சுமார் எண்பது வயதிருக்கும். அந்த காலத்திலேயே கண்ணாடி போட்டிருந்ததால் கண்ணாடி ஆயா என்றே அழைப்போம். அவரும் எங்கள் கிணற்றில் தண்ணீர் எடுக்க வருவார். ரொம்ப வயதான பாட்டி ஆயிற்றே என்று நான் இருக்கும்போதெல்லாம் தண்ணீர் சேந்திக் கொடுப்பேன். எதுவும் சொல்லாமல் குடத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்.
குடத்தில் நீர் தளும்பத் தளும்ப இருக்க வேண்டும் பாட்டிக்கு. சிறிது குறைந்தாலும் "உன் மாமியார் கண்ணு குருடா? தண்ணி கொறச்சலா இருக்கு" என்று திட்டிக்கொண்டே செல்வார். தண்ணீர் சரியாக ஊற்றினால், வேகமா சேந்த மாட்டியா என்று ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பார். எனக்கும் கோவம் வரும். பெரியவர்களிடம் சண்டை போடக்கூடாது என்று அம்மா சொன்னதால் அமைதியாகி விடுவேன்.
ஒரு முறை எங்கள் பக்கத்து வீட்டு பெரியம்மா பையன் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தான். கண்ணாடி ஆயாவும் குடத்தைத் தூக்கிக் கொண்டு வந்து நின்றது. அவனிடம் "எங்க போனா உங்க ஆத்தாகாரி? இப்படி ஆம்பள பையன வேல செய்ய விட்டுட்டு அவ என்ன பண்றாளாம்" என்று கேட்டது. அவனும் பதில் சொல்லிக்கொண்டே பாட்டியின் குடத்துக்கும் சேர்த்து நீர் இறைத்து முடித்தான். உடனே இந்த ஆயா "நீ மகராசனா இருப்பா. ஆம்பள பையன் இப்படி தண்ணி சேந்திரியே" என்று கூறிவிட்டு சென்றது.
"அடி பாவி கிழவி நான் எத்தனை தடவை தண்ணீர் சேந்தி ஊத்தியிருப்பேன். ஒருமுறையாவது ஒரு நல்ல வார்த்தை சொல்லியிருப்பியா? நீ நல்ல வார்த்தை சொல்ல வேண்டாம். குறை சொல்லாமல், திட்டாமல் இருந்திருப்பியா?" என்று திட்டிக்கொண்டேன். அப்பொழுதே ஏன் ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் சமமாக பார்ப்பதில்லை என்ற கேள்வி தொடங்கியிருந்தது. அதுவே வளர வளர வெறுப்பாகவும் மாறத் தொடங்கியிருந்தது.
நகரத்து வாழ்விற்கு வந்து எட்டு வருடங்களாகிறது. இங்கு நான் ஒரு கிணற்றைக்கூட பார்த்ததில்லை. ஊரில் இருந்த சமயத்தில் சிறிது தண்ணீர் சிந்தினால் கூட "தண்ணியை காசு கொடுத்து வாங்கி குடிக்கும்போது தான் தெரியும் அதன் அருமை" என்று பள்ளியில் படித்ததை வைத்து சண்டை போடுவேன். "தண்ணிய யாராவது காசு போட்டு வாங்குவாங்களா?" என்று என் வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் என்னை பார்த்து சிரித்தனர்.
பதினேழு வருடங்கள் ஆகிறது நான் அதை கூறி. இப்பொழுது எங்கள் ஊரிலேயே கேன் தண்ணீர் விற்பனை பிரமாதமாக இருக்கிறது. சிரித்த அனைவரும் இப்பொழுது கேன் தண்ணி தான். நகரத்திலும் இது தான். 25 லிட்டர் கேன் தண்ணி 35 ரூபாய். நகரத்தில் எங்களுக்கு வேறு வழியில்லை. சரி கிராமத்தில் தான் காவிரித் தண்ணீர் வருகிறதே, போதாகுறைக்கு ஊர் பொது கிணற்றில் தண்ணீர் இருக்கிறதே என்றால் "இந்த தண்ணீர் குடித்தால் கேன்சர் வருகிறதாம். கேன் தண்ணி தான் சுத்தமாம். அது தான் நல்லதாம்" என்று பதில் வருகிறது.
என்ன என்னவோ காரணங்கள் கூறி நமக்கு இலவசமாக இயற்கை கொடுத்த அனைத்தையும் அழித்தும், இழந்தும் வருகிறோம். நவீன வளர்ச்சியில் நாம் இழந்து வருவதில் கிணறுகள் முக்கியமானவை. அறிவியல் வளர்ச்சியின் கூடவே மூட நம்பிக்கையின் வளர்ச்சி அதீதம். ஆம் அந்த மூட நம்பிக்கையால் தான் நான் எங்கள் வீட்டு கிணறை இழந்தேன். எங்கள் ஊரில் உள்ள வாஸ்த்து நிபுணராகவும் அதி மேதாவியாக கருதப்படும் ஒருவரால் எங்கள் கிணற்றுக்கு பால் ஊற்றி மூடப்பட்டது.
கிணறு அக்னி மூலையில் இருப்பதாகவும் குடும்பத்திற்கு ஆகாது என்றும் கூறி மண்ணை வாரிப் போட்டனர். எம் முன்னோர்கள் யாரும் இதை அறிந்திராமல் தான் கிணறு வெட்டினார்களா? அவர்கள் வாஸ்த்து அறிந்திருக்கவில்லையா? அப்படியென்றால் அவர்கள் குடும்பம் நன்றாக வாழவில்லையா? நன்றாக வாழவில்லையென்றால் எங்கள் தலைமுறை வரை எப்படி பிழைத்திருக்கிறோம்?
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த வாழ்க்கையே இன்பமாய் இருந்தது. இயற்கையோடு தொடர்பற்ற இடத்தில் பற்று குறைந்தேவிடுகிறது.

Your blog made me to remember that patti after very long time.
ReplyDeleteஎத்தனை பேருக்கு இந்த உணர்வுகள் புரியும் என்ற கேள்வி என்னுள் எழுந்தாலும், இதை படிப்பவர்கள் மனதில் ஒரு கிணறு இத்தகைய உணர்வுகளை ஏற்படுத்துமா என்ற கேள்வியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. மனதில் எழும் கேள்வி தான் பல புது மற்றங்களுக்கான காரணகர்த்தா!!!!இதை படிக்கும் போது இதயத்தில் ஒரு நுண்ணிய வலி தோன்றி மனம் கனக்கத் தான் செய்கிறது...those who love nature will lead contented life!!!!
ReplyDelete