இன்று வியாழக்கிழமை. சாய்பாபாவிற்காக விரதம் இருக்க உகந்த நாள். இன்று ஒரு நாள் ஒரு வேலை உணவு மட்டுமே எடுக்கலாம். அது எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம். நான் பொதுவாக இரவு உணவு மட்டும் எடுத்துக்கொள்வேன். இந்த சாய்பாபா விரதம் பற்றி சுமார் 10 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பெரிதும் அறியப்படாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது அநேகமாக அறுபது சதவீதம் பேர் முக்கியமாக பெண்கள் சாய்பாபாவை வழிபடுகிறார்கள் என்றே தோன்றுகிறது.
எங்கள் ஊரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஊராட்சி கோட்டை மலை அடிவாரத்தில் ஒரு மாந்தோப்பின் முடிவில் என்றும் அமர்ந்திருப்பார் ஒரு சாய்பாபா. அன்று அவரை பெரிதாய் யாரும் கண்டுகொண்டதில்லை. அனால் இப்பொழுதெல்லாம் பெரும் கூட்டம் வரிசை கட்டி நிற்கிறது என்று அப்பா கூறினார்.
எனக்கு இந்த மனித பிறவியில் கடவுள் அவதாரம் என்று கூறுபவர்கள் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. ஆனால் இந்த சாய்பாபா நம்பிக்கை எப்படி வந்ததென்றால் சென்னையில் வேலையில் சேர்ந்து ஒரு வருடம் ஆகியிருந்தது. மூன்று மாதம் பயிற்சி அதன் பிறகு வேலை. ஐ டி துறையில் மென்பொருள் சேவை நிறுவனமாக இருந்தால் அவ்வளவு எளிதில் புதிதாக வந்தவர்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள். பெஞ்ச் பீரியட் என்று சொல்லி வேலை இல்லாமல் தினமும் அலுவலகம் சென்று வர வேண்டும்.
புதிதாக வந்தவர்களுக்கு வேலை தெரியாது என்று சொல்லி எந்த ப்ராஜெக்ட்டிலும் எடுக்க மாட்டார்கள். யாரும் வேலை கொடுக்காததால் எங்களுக்கும் வேலை தெரியாது. எனக்கும் ஒரு வருடம் வேலை இல்லாமல் அலுவலகம் சென்று வருவது வெறுத்துப்போனது. சும்மா உட்கார்ந்து சம்பளம் வாங்க கை கூசவில்லை. ஆனால் எதுவும் கற்றுக்கொள்ளாமல் இருப்பது ஒருவித பயத்தை அளித்தது. மிக நெருக்கடியான சூழல். பெங்களூரு வந்த நண்பர்களுக்கு ப்ராஜெக்ட் கிடைத்தது என்றும், இங்கே வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்கள்.
ஆனால் என்னை பெங்களூரு அனுப்ப ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. அப்பொழுது அலுவலகத்தில் வேலை செய்யும் தம்பி ஒருவன் வியாழன் அன்று அவன் வழக்கமாக செல்லும் சாய்பாபா கோவிலுக்கு செல்லும்போது என்னையும் அழைத்து சென்றான். நான் நம்பிக்கையில்லை என்றேன். அவன் நடக்காத ஒரு விசையத்தை நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய். அது நடந்தால் நம்பு என்றான். சரி என்று நானும், காசா பணமா வேண்டி வைப்போம் என்று பெங்களூருவில் ப்ராஜெக்ட் கிடைக்க வேண்டும் என்று நினைத்து வைத்துக்கொண்டேன்.
பாருங்கள் ஒரு வாரத்தில் ப்ராஜெக்ட் கிடைத்தது. இடமாற்றமும் கிடைத்தது. இது சாய்பாபா அருள் தானா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். மறுபடியும் ஒரு சோதனை வைப்போம் என்று இன்போசிஸ் நிறுவன நேர்முக தேர்வை முடித்துவிட்டு சாய்பாபாவிடம் சொல்லிவைத்தேன். அவர் இப்போதும் நீ நம்பித்தான் ஆக வேண்டும் என்றார். நான் முடியாது என்று இன்னொன்றை வேண்டினேன். என் அண்ணனுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று தான். ஒரே வாரத்தில் அதையும் செய்தார்.
சரி இப்படி நம்பிக்கை இல்லை இல்லை என்று சொல்லிச் சொல்லி எல்லா காரியத்தையும் நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று திட்டம் போட்டு ஒவ்வொன்றாய் அவரிடம் சொன்னால், என்னை ஏமாற்றுகிறாயா என்று இனி ஒன்றும் செய்து தர மாட்டேன் என்று சொல்லி கோபித்து கொண்டார் போல. இப்பொழுதெல்லாம் என்ன வேண்டினாலும் நடக்க மேட்டேங்குதே என்று தான் இந்த விரதம்.
இப்படி ஒரு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாமல் நாம் அனைவரும் நம் சுயநலத்திற்காக விரதம் இருக்க, வடக்கில் துறவிகள் கங்கையை காப்பாற்ற உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்கிறார்கள். அதில் முக்கியமானவரின் நினைவுதினம் இன்று. ஆம் நீரின் தூய்மைக்காக போராடி உயிர் துறந்தவர் தான் நிகமானந்தா எனும் துறவி. ஒரு நாள் இரண்டு நாள் இல்லை. 114 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார்.
இளம் துறவி ஆத்மபோதானந்
அவர் மட்டுமல்ல அவரை போன்று அடுத்தடுத்து துறவிகள் அந்த உண்ணா நோன்பினை தொடர்ந்தனர். இறுதியாக நோன்பிருந்த இளம் துறவி ஆத்மபோதானந் 194 நாட்கள் வரை கங்கைக்காக விரதம் இருந்து அரசு வேண்டுகோளை ஏற்றதனால் விரதத்தை கடந்த மே மாதம் முடித்துக்கொண்டார். இப்படி இயற்கைக்காக நோன்பு இருப்பவர்களை வணங்கலாம். வழிபடலாம். தவறே இல்லை. ஏனோ என் விரதத்தைப் பார்த்து நானே சிரித்துக்கொள்கிறேன்.
இன்று வறண்ட தமிழகம் முழுவதும் மழை பெய்தது என்றறிந்தேன். ஆம் இன்று நிகமானந்தா உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த நாள். இயற்கை அன்னை அவள் அஞ்சலியை செலுத்திவிட்டாள்.

அருமை.நான் பல தெய்வத்தை வேண்டினேன் அதில் சாய்பாபா ஒன்று அதனால் எந்த தெய்வம் எனக்கு உதவியது என்று சரியாக தெரியவில்லை அதன்பின் அதையும் விட்டு விட்டேன்.
ReplyDelete