தினமும் எழுத வேண்டும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்னமே முடிவு செய்து எழுத ஆரம்பித்தேன். ஆனால் என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை. பல காரணங்கள் கூறலாம். சோம்பேறித்தனம், சுய ஒழுக்கமின்மை, அதிகமான கவனச்சிதறல் என்று ஏகப்பட்டதை சொல்லலாம். ஆனால் காரணங்கள் வெறும் காரணங்களே.
சரி தொடர்ந்து எழுத ஊக்கம் தேவைப்பட்டதால் வலைப்பதிவைத் தொடங்கி எழுதிப் பார்த்தேன். ஆடிக்கொருவாட்டி அம்மாவாசைக்கு ஒருவாட்டின்னு எழுதுனா எப்படினு என்மேலேயே எனக்கு கடுப்பாகிவிட்டது. இருந்தாலும் ஒவ்வொரு முறையும் விடாமல் ஆரம்பிக்கிறேன். முயற்சிக்காமல் இருப்பது தான் தவறு.
பிடித்ததை செய்துகொண்டே இருக்க வேண்டும். அதில் எவ்வளவு பிழை இருந்தாலும் செய்ய வேண்டும். எனக்கு இருக்கும் இன்னொரு பிரச்சனை, ஒரு செயலை பிழை இல்லாமல் மிக நேர்த்தியாக, மிக பூர்ணத்துவத்துடன் செய்ய வேண்டும். அதாவது ஆங்கிலத்தில் பெர்பெக்ஷன்(Perfection) என்பார்களே அப்படி இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த செயலை செய்யவேண்டியதில்லை என்று நினைப்பவள்.
நான் மட்டுமல்ல முக்கால்வாசி பெண்கள் அப்படித்தான். எங்கள் வீட்டிலேயே எடுத்துக்கொள்ளலாம். என் அம்மா பாத்திரம் கழுவி முடித்தபிறகு அதை நேர்த்தியாக அடுக்கி வைப்பார்கள். அதே போல நான் கழுவும் போதும் நேர்த்தியாக அடுக்கி வைக்க வேண்டும். இல்லையென்றால் அதற்க்கு ஒரு திட்டு விழும். ஒருவேளை அவர்களுக்கு திருப்தி இல்லையென்றால் அவர்களே அதை சரி செய்துவிட்டு தான் செல்வார்கள். அடுத்தமுறை அந்த வேலையை செய்ய சொல்லமாட்டார்கள்.
சரியாக ஒரு வேலையை செய்வது என்பது பெண்கள் அகராதியில், அவர்களுக்கு தெரிந்த மாதிரி செய்வதே. அவர்கள்(பெண்கள்) செய்வதை போல் செய்யாமல் மாற்றி செய்தால் அது தவறுதான். அந்த வேலையை இன்னும் எளிமையாக செய்தாலும் தவறு தவறு தான். சொல்வதை அப்படியே ஈயடித்தான் காப்பி போல செய்தாலும் பெண்களுக்கு திருப்தி இருக்காது. இதனால் தான் ஆண்கள் தான் எவ்வளவு உதவி செய்தாலும் தன் மனைவியை திருப்தி செய்யமுடியவில்லை என்று புலம்புகிறார்கள். பெண்களை திருப்தி செய்வது அவ்வளவு எளிதில்லை.
எதை வாங்கிக் கொடுத்து வியப்பூட்ட செய்தாலும், அவர்கள் இன்னும் கொஞ்சம் சிறந்ததாக வாங்கியிருக்கலாம் என்று சொல்லவோ மனதில் நினைக்கவோ செய்வார்கள். தானே வாங்கியிருந்தால் இன்னும் சிறந்ததை தேர்வு செய்திருப்பேன் என்று எண்ணுவார்கள். ஏனெனில் பெண்களுக்கு தன்னால் தான் சிறப்பாக செய்ய முடியும் என்று எப்பொழுதுமே ஒரு எண்ணம் இருக்கும்.
அப்படித்தான் நானும் சிறப்பாக எழுத வேண்டும் என்று நினைத்து நினைத்து எழுவதே இல்லை. இனி ஒரு முடிவு. ரொம்ப மொக்கையாக இருந்தாலும் பரவாயில்லை எழுதவேண்டும் என்று. பார்ப்போம் இது எவ்வளவு நாள் என்று.
(பி.கு : ஆண்கள் எவ்வளவு தவறாக ஒரு வேலையை செய்தாலும் வெளியே மட்டுமே பெண்கள் திட்டுவார்கள். உள்ளூர அந்த வேலையை ரசிப்பார்கள்.)

பின்குறிப்பு உண்மைதானா
ReplyDelete