அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்புவரை படித்து முடித்து, என் வாழ்வை எப்படி தொடர்வது என்று குழம்பி இருந்த தருணம். பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் கல்லூரியில் படிப்பதென்பது பெரும் கனவாகவே இருந்தது. அதுவும் பெண்களுக்கு எட்டாக் கனி. கீழ் தட்டு குடும்பத்தில் பிறந்திருந்தால் இன்னும் மோசம். எங்கள் பகுதியில் பெரும் பணக்காரர்கள், நிறைய தோட்டம், சொத்து வைத்திருப்பவர்கள், அரசாங்க வேளையில் இருப்பவர்கள், நிலையான சம்பளம் வாங்குபவர்கள், தொழிலதிபர்கள் போன்றவர்களின் பிள்ளைகள் மட்டுமே பள்ளியைத் தாண்டி கல்லூரி படிப்பிற்கு செல்வார்கள்.
பெரிய பெரிய கனவுகல் இருந்தாலும் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்திருந்தேன். என்னவென்றால் எங்கள் ஊரில் எனக்கு முன்பு இருந்த அக்காங்களை போல் பள்ளிக்கு பிறகு திருமணம் செய்துகொண்டு கையில் ஒரு குழந்தையுடனும், இடுப்பில் ஒரு குழந்தையுடனும் என் ஊருக்கு வந்து போக கூடாது என்பது தான். என் சொந்த காலில் நிற்க வேண்டும். இங்கு உள்ள பெண்களுக்கு கனவு காண கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்காக நான் என் வாழ்வை மாற்றி அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
என் அப்பாவோ, பள்ளி படிப்பு முடிந்தது இனி இரண்டு வருடம் தையல் கற்றுக்கொண்டு வேலை செய். அப்புறம் திருமணம் செய்து வைக்கிறேன் என்று என்னிடம் பொறுமையாக பேசினார். அவர் என்ன செய்ய முடியும். இதுதான் ஆண்டாண்டு காலமாக வழக்கில் இருந்து வருகிறது. அதுவும் பொருளாதார பின்புலம் இல்லாதவர். வீட்டில் உணவுக்கு பிரச்சனையில்லை அனால் பெரிதாய் எதுவும் செலவு செய்ய முடியாத சூழல்.
அழுது புரண்டு, சாப்பிடாமல் இருந்து, உறவினர் அண்ணன்களையெல்லாம் உதவிக்கு அழைத்து அப்பாவை சம்மதிக்க வைத்து இளங்கலை கணிதத்தில் விவேகானந்தா மகளிர் கல்லூரியில் சேர்ந்தேன். 3 வருடத்திற்கு முப்பத்தி ஆறாயிரம் செலவு ஆனது. பெரும் தொகை தான். இதற்காக அப்பா வெளி மாநிலங்களுக்கு லாரி ஓட்டச் சென்றார். செலவு தாங்காமல் என் தங்கையும் அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டாள்.
மூன்று வருடம் முடித்து முதுகலை கணிப்பொறியில் விண்ணப்பித்தேன். அப்பாவோ கணிதம் ஆசிரியர் பயிற்சிக்கு சேர்ந்துகொள், அது தான் பெண்களுக்கான வேலை என்றார். அதுவும் மூன்று வருடம் முதுகலை கணிப்பொறி பயில பணம் இல்லை என்றார். அண்ணா பழ்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரியில் படித்தால் பெரிய செலவு செய்ய வேண்டி வரும். கிட்டத்தட்ட பொறியியல் படிப்பிற்கு நிகராக லட்சங்களில் செலவு ஆகும். நுழைவுத் தேர்வில் தனியார் கல்லூரியே கிடைத்திருந்தது.
அப்பொழுதிருந்த காங்கிரஸ் அரசு கல்விக்கடன் திட்டத்தை அறிமுகம் செய்து கல்வி கடன் கொடுத்து வந்தது. தமிழ்நாட்டில் அது நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டிருந்தது. கல்விக்கடனை எப்படியும் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் துணிந்து கல்லூரியில் சேர்ந்தேன். அரசு வங்கிகள் கையை விரித்திருந்தாலும், தனியார் வங்கிகள் உதவின. வங்கி மேலாளர் எங்கள் வீட்டிற்கு வந்து எங்கள் குடிசை வீட்டையும், கால்நடைகளின் சாலையையும் பார்த்துவிட்டு என் தங்கையிடம் மதிப்பெண்னை மட்டும் கேட்டுவிட்டு வேறெதுவும் கேட்காமல் கடனை வழங்கினார்.
என் வாழ்வில் முக்கியத் திருப்பம் இந்த கல்வி கடனாலேயே நிகழ்ந்தது. குடும்ப பின்னணியை பார்த்து அவர் எந்த கேள்வியும் கேட்காமல் கல்விக்கடன் கொடுத்தார். அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும், இந்த கல்விக்கடனால் ஒரு தலைமுறையின் வாழ்வே மாறும் என்று. நான் மட்டுமல்ல என் தங்கையும் கல்விக்கடன் மூலம் தான் பொறியியல் படித்து முடித்தாள். இருவரும் படித்து முடித்து மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்து இன்று அந்த கல்விக்கடனையும் கட்டி முடித்தாயிற்று. என் தந்தைக்கும் பணி ஓய்வு கொடுத்தாயிற்று. கல்விக்கடன் இல்லையென்றால் எங்களின் நிலமை?
படித்து முடித்து 6 மாதங்களில் வேலை தேடி அலைந்திருக்கிறேன். வேலை கிடைக்கும் வரையோ அல்லது கிடைத்த பின்னோ கடனை கேட்டு வந்து யாரும் வாசலில் நிற்கவில்லை. இதுவே நான் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தாலும், அடகு வைக்க என்னென்ன கேட்டிருப்பார்கள். அடகு வைக்க எதுவும் இல்லை என்பதால் கடன் கிடைத்திருந்திருக்காது. அடகு இல்லாமல் கடன் கொடுத்திருந்தாலும், வேலைக்கு செல்வதற்குள் என்னென்ன பேச்சுக்கள், தொந்தரவுகள், வட்டியின் உச்சம் என்று எத்துனை அல்லல் பட்டிருக்க வேண்டும்.
நான் மட்டுமல்ல எல்லா கீழ்த்தட்டு மக்களின் குடும்பங்களின் ஒரு தலைமுறை வாழ்வை மாற்றியதே இந்த திட்டம் தான். என் வகுப்பில் படித்தவர்களில் முதல் தலைமுறை பட்டதாரியான 70 சதவீதம் பேர் கல்விக்கடன் மூலம் வந்தவர்களே. கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள் முதல் வருமானம் இல்லாதவர்களின் பிள்ளைகள் வரை இன்று பயன்பெற்றிருப்பதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்.
உறவினர்களில் எத்துனை பேர் எங்களை ஏளனமாகவும் இலக்காரமாகவும் பார்த்தார்கள் பேசினார்கள் என்று எனக்குத் தெரியும். பணத்தை வைத்தே உறவுகளின் முக்கியத்துவம் பார்க்கப்பட்டது. இதையும் தாண்டி யாரும் உதவி செய்யவில்லை, செய்யவும் மாட்டார்கள். இன்று நிலைமை வேறு. மொத்தமாக ஒரு தலைமுறையின் வாழ்வே மாறிப்போயிருக்கிறது.
நல்ல வேலை அப்பொழுது மட்டும் மத்திய அரசாங்கம் இந்த திட்டத்திற்கு பதிலாக ஒரு சிலையை கட்டியிருந்திருந்தால் அந்த சுற்றுலா தளத்தில் என் பிள்ளைகள் டீ, வடை விற்று பிழைத்துக் கொண்டிருந்திருப்பார்களோ என்னவோ.
ஒரு அரசோ/கட்சியோ இது போன்ற அடித்தட்டு மக்களின் வாழ்வை முன்னேற்றும் திட்டத்தை வகுத்து அதை சரியான முறையில் செயல்படுத்துவார்களேயானால் அவர்களுக்கு துணிந்து வாக்களிக்கலாம்.

கல்விக்கடன் மிகச் சிறந்த திட்டம்... இல்லையெனில் ஓட்டுனரான என் அப்பாவால் ஒரு பொறியியல் பட்டதாரியையும் ஒரு மருத்துவரையும் உருவாக்க முடியுமா?
ReplyDeleteஉங்கள் வாழ்க்கை உங்களுக்கு நல்ல அனுபவங்களை அப்பொழுதே சொல்லித் தந்துள்ளது அக்கா...இனி எதிர்காலத்தில் நிச்சயமாக நல்லது நடக்கும்...நடக்கட்டும்������.. இறுதியில் நல்ல பதிவு..
ReplyDeleteஒரு தரமான பதிவு மைவிழி, கல்வி கடன் இல்லை என்றால் என் வாழ்க்கை இப்போது எப்படி இருக்கும் என்று என்னால நினைத்து பார்க்க முடிக்கிறந்து. நாணும் என் தந்தை போல் காலை 4 மணியில் இருந்து இரவு 10 மணி வரை இடைவிடாது நெசவு நெய்தால் தான் குடும்பத்திற்கு 3 வேலை சாப்பாடு. இப்போது நாம் பணியில் இருக்கும் சென்னை, பெங்களூர் எல்லாம் நமக்கு சுற்றுலா தளமாக மாறி நமது 6 மாத 1 வருட சேமிப்பு எல்லாம் செலவழிக்க வேண்டும்.
ReplyDeleteஒரு வேளை அந்த சிலை செய்த முட்டாளுக்கும் கல்வி கடன் கொடுத்து இருந்தால் படித்து புத்தி வந்து இருக்குமோ என்னவோ??!!
ReplyDeleteInspiring to read about this, kudos to you!
ReplyDelete