நேற்று புத்தாண்டு தொடங்கியாயிற்று. இந்த வருடம் புத்தாண்டு தொடங்கும்போது பயணத்தில் இருந்தேன். எல்லா ஆர்ப்பாட்டங்களையும், கொண்டாட்டங்களையும் பார்த்து சலித்துப் போயிருக்கிறேன். ஆனால் மற்றவர்களை உற்ச்சாகமாக பார்க்க நன்றாக இருந்தது.
எல்லா நாட்களை போல் இதுவும் ஒரு சாதாரண நாள் தான். எனக்கு வழக்கம் போல் அலுவலகம், வேலை, வாசிப்பு என்று சென்றது.
ஆனால் இந்த வருடம் மிக அற்புதமாய் இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியும். ஏனென்றால் வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்து வந்துகொண்டு இருக்கிறேன். வாழ்தல் இனிது என்றும் அது எதில் உள்ளது என்று அர்த்தம் கொள்ளப் பெறுகிறேன்.
ஆம், இதுவரை ஒரு இலக்கை அடைவது, கனவை அடைவதுதான் மகிழ்ச்சி என்று புரிந்திருந்தேன். அது போலவே தான் ஓடி ஓடி ஒரு கனவை அடைவதும், குறிக்கோளை முன் வைத்து ஓடுவதும் என்று வாழ்வின் மகிழ்ச்சிக்காக அலைந்து கொண்டிருந்தேன். வாழ்க்கைக்கான தேடல் மட்டும் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் வாழ்வு அதல்ல, மகிழ்ச்சி அதல்ல என்று இப்பொழுது என் தேடலுக்கான விடை கிடக்கிறது.
வாழ்வு வாழ்தலில் இருக்கிறது. ஒரு குறிக்கோளை அடைவது வாழ்தல் அல்ல. ஒரு குறிக்கோளை நோக்கி செல்லும் பயணம் தான் வாழ்தல். அந்த பயணத்தை ஒவ்வொரு நொடியும் மகிழ்வுடனும், அன்புடனும், அர்ப்பணிப்புடனும் கடக்க வேண்டும். ஒவ்வொரு கணத்தையும் வாழ வேண்டும்.

நம் குறிக்கோள் அடுத்தவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதாய் இருந்தால் அதன் பயணம் இன்னும் அற்புதமாய் இருக்கும்.
இரவு 12.30 மணிக்கு பேருந்து ஒரு தேநீர் கடையில் நின்றது. அங்கே அந்த நேரத்தில் வேலை செய்யும் இரு சிறுவர்கள் புத்தாண்டு வாழ்த்தை புன்னைகையுடன் உற்ச்சாகமாக கூறினார்கள். அவர்களின் அந்த சிரிப்பும், சந்தோஷமும் தான் எனக்கான வாழ்த்தாக இருந்தது.
இந்த வருடம் மிக அற்புதமாய் இருக்கும்.
எல்லாம் செயல் கூடும்!!
:)
ReplyDelete