கடந்த 2, 3 நாட்களாக ஏனோ ஒரு மாதிரியான மனநிலை. உற்சாகமிழந்து, மிகவும் வெறுப்பாக இருந்தது. இந்த மனநிலை அடிக்கடி வரக்கூடியது தான். மாதம் ஒரு முறை நான்கு ஐந்து நாட்கள் அல்லது ஒரு வாரம் கூட இந்த மனநிலை இருக்கும்.
சில நேரங்களில் காரணமில்லாமல் அழுகையாய் வந்தது. கண்மூடித்தனமான கோபம். எல்லோர் மீதும் எரிச்சல், வெறுப்பு, ஏமாற்றம் என்று காரணமில்லாமல் நம்மிடம் நெருக்கமாய் இருப்பவர்கள் மீது கூட திட்டி தீர்க்க தோன்றுகிறது. வாழ்வே முடிந்து போய்விட்டதாய் தோன்றுகிற மனநிலை.
உணர முடியாத பதட்டம், தேவையில்லாத பயம், எண்ணக்குலைவு என்று என்னை ஆட்டிப் படைக்கிறது. எதிலும் நாட்டமில்லை. பிடித்த புத்தகங்களைக் கூட தொட முடியவில்லை. பிடித்த படங்களை இரண்டு நிமிடம் கூட பார்க்கத் முடியவில்லை. இதை யாரிடம் என்னவென்று சொல்லி புரிய வைப்பது அல்லது ஒரு தீர்வு கேட்பது என்று தேடிக்கொண்டிருந்தேன்.
எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக ஓடிக்கொண்டே இருந்தது. இது எதனால் என்பது புரியும். ஆனால் ஏன் என்று தான் புரியவில்லை. ஆம் இது மாதவிடாயினால் தான். ஒரு வாரம் முன்பே இந்த மனநிலை வந்து விடுகிறது. இதை வெகு சிலரே புரிந்துகொள்கிறார்கள். பெண்கள் என்றும் ஒரு மனநிலையில் இருப்பதில்லை என்பது இதனால் தான்.
நேற்று நான் ஒரு விடயத்தை சரி என்று பேசியிருப்பேன். அதையே இன்று தவறு என்று பேசும் அளவிற்கு என் மனநிலை மாறியிருக்கும். அவ்வளவு மோசமான மனநிலையில் இருக்கும் நேரம் இது. இதை பற்றி முத்துவிடம் தான் பேசிக் கொண்டிருந்தேன். அவர் எனக்கு ஒரு விளக்கப்படம் அனுப்பி வைத்தார்.
அதை இங்கே பதிவிடுகிறேன். பொதுவாக ஆண்களின் மனநிலை என்றும் ஒரே அளவில் இருக்கும். அதாவது 100 ல் இருக்கும். எல்லா நாட்களிலும் அவர்களால் ஒரே மனநிலையில் இருக்க முடியும். குழப்பங்கள் இல்லாமல் தெளிவாக யோசிக்க முடியும். பயம், எரிச்சல், கோவம், வெறுப்பு என்று எதுவும் காரணமில்லாமல் வராது. அதனால் அவர்களால் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க முடியும்.
ஆனால் இந்த படத்தில் இருப்பது பெண்களின் மனநிலைக்கான விளக்கப் படம். கீழே இருக்கும் ஒன்று என்பது மாதவிடாயின் முதல் நாள். முதல் நாளிலிருந்து 14 நாட்கள் வரை ஆற்றல் ஏறுமுகமாக இருக்கும். அதாவது நேர்மறை எண்ணங்களால் சூழ்ந்திருப்போம். சொல்ல போனால் ஆண்களை விட அதிக ஆற்றல் 10 ஆம் நாளிலிருந்து 18 ஆம் நாள் வரை இருக்கும். 300 வரை இருக்கும். ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகம்.
அதன் பிறகு அது குறைந்து 22 ஆம் நாள் எதிர்மறை மனநிலைக்கு தள்ளப்படுவோம். -100 அதாவது ஆண்களை விட 2 மடங்கு கீழே சென்றிருப்போம். இந்த நாட்களில் தான் வாழ்க்கையின் வெறுப்பின் உச்சத்தில் இருப்போம். 3 லிருந்து 6 நாட்கள் வரை இந்த மனநிலை இருக்கும். அதன் பிறகு மீண்டும் ஒரு ஏற்றம் 150 வரை. பின் இறக்கம்.
இப்போது தெரிகிறதா உங்களால் ஏன் பெண்களை புரிந்துகொள்ள முடியவில்லை என்று. ஏன்னென்றால் எங்களிடமே எங்கள் கட்டுப்பாடு இல்லை. ஆண்கள் என்ன செய்வார்கள். இதற்கு தீர்வு இருக்கிறதா என்று தேட வேண்டும்.
இது அனைத்து பெண்களுக்கும் பொருந்தும். வீட்டில் உள்ளவர்கள், நண்பர்கள் புரிந்து நடந்து கொண்டால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். இது பெண்களின் மாதவிடாய் காலம் மட்டும் அல்ல, ஆண்களுக்கும் தான்.

No comments:
Post a Comment