வாழ்வை ஒவ்வொரு நொடியும் சந்தோசமாகவும், மக்களுடன் கூடி கொண்டாட்டமாகவும், தினம்தினம் திருவிழா போல வாழ வேண்டும் என்பது என் கனவு. சத்தம் போட்டு சிரிப்பதற்கு கூட கட்டுப்பாடுகள் இருந்தால் அதை உடைத்தெறியவே நான் ஆசை படுகிறேன். அறத்தை மீறாத, கட்டுப்பாடுகளற்ற வாழ்வையே தேடுகிறேன்.
எல்லோர் போலவும் வேலை, நல்ல சம்பளம், தொந்தரவு இல்லாத குடும்பம், பிரச்சனை இல்லாத வாழ்க்கை, நினைக்கும் போது ஓய்வு, எதிர்காலத்தை பற்றிய பயமின்மை, நல்ல பொருளாதார சூழ்நிலை என்று ஒரு சாதாரண வாழ்க்கை போய்க்கொண்டிருந்தாலும் என்னால் தொடர்ந்து இதில் பயணிக்க முடியவில்லை.
பணம் செய்து, சொத்து சேர்த்து, அதை பெருமையாய் காட்டிக் கொண்டு திரிவதில் ஏனோ மனம் நாடவில்லை. இந்த சராசரி வாழ்க்கையை தொடர்வது தினம் தினம் ஒரு போராட்டமாய் இருக்கிறது. மனதிற்கு ஒவ்வாத ஒன்றை என்னை சுற்றியிருக்கும் மக்களின் வாய்ச்சொல்லுக்காக செய்ய நரகமாய் இருக்கிறது.
இதை செய்வதில் என்ன கடினம். நிம்மதியான வாழ்க்கை தானே. எல்லோரும் இது போலத் தானே வாழ்கிறார்கள் என்று கேட்கலாம். ஆனால் என்னால் அவ்வாறு கடந்து போக முடியவில்லையே. ஒரு தவறை அறம் மீறலை பார்க்கும்போது கோபம் வருகிறதே.
பிறந்ததிலிருந்து பார்த்து வளர்ந்த ஊரின் நுழைவாயிலில் காலம் காலமாக இருந்த மரத்தை வளர்ச்சியின் காரணமாக வெட்டும்போதும், ஏன் நாம் நட்டு வைத்த மரத்தை வீட்டின்/கடையின் முன் மரம் ஆகாது என்று குழந்தையை போன்ற மரக்கன்றை இரவோடு இரவாக பிடுங்கி எரிந்து மண் போட்டு மூடிவிடும் மூடத்தனத்தைப் பார்த்தால் கோபம் வருகிறதே.
பேருந்தில் இருக்கை இருந்தாலும் அமராமல் நின்ற பாட்டியிடம் உட்கார சொன்னால், அவர்கள் பக்கத்தில் நாங்கள் உட்காரக்கூடாது என்று சொல்லும் பாட்டியை முறைத்தபடியே இருக்கையில் அமர்ந்திருக்கும் அந்த நடுத்தர வயது பெண்மணி, அந்த பாட்டி உட்கார்ந்துவிட கூடாது என்று முறைப்பதை பார்த்தால் கோபம் வருகிறதே.
இன்றும் திருமண சடங்கில் தனது பேரப்பிள்ளைகளின் வயதுமிக்க மணமக்களின் காலில் செருப்பு மாட்டி அவர்களின் காலில் விழுந்து வணங்கும் 60, 70 வயதுமிக்க தாத்தாவையும், அவரின் மனைவியையும் பெருமையுடன் பார்க்கும் படித்த மணமக்களும், சுற்றியிருக்கும் உறவினர்களும் சம்பிரதாயம் என்று சொல்லி மார் தட்டும்போது கோபம் வருகிறதே.
படித்த நல்ல அறிவு கொண்ட, வளர்ந்த சமூகத்தில் வளர்ந்து இருக்கும் இளைஞர்கள் கூட தன் சொந்த சாதியில் உள்ள அறமற்ற செயல்களை கூறினால் ஏற்க முடியாமல், சாதி ஆதரவு செய்து சண்டை போடுவதை பார்க்க அருவருப்பாகவும் கோபமும் வருகிறதே.
ஆற்றில் வெள்ளம் வருவதை பயன்படுத்தி வெள்ளத்தில் மாநகரத்தின் மொத்த கழிவுகளையும் கொட்டும்
ஒரு மாநகராட்சியின் நடத்தையும், அதே போன்று தன் தொழிற்சாலை கழிவுகளை ஆற்றில் திறந்துவிடும் நாட்டின் தூணாய் இருக்கும் தொழிலதிபர்களையும், சொல்லப்போனால் இன்று நாடே அவர்கள் கையில் இருப்பதை பார்க்கும்போது கோபம் வருகிறதே.
இப்படி வெறும் கோபம் மட்டும் படாமல் அதற்கான தீர்வை நோக்கி அடியெடுத்து வைப்பதே வருங்காலத்தில் இன்னொரு பெண் என்னை போன்று கோபப்படாமல் இருப்பதற்கு தீர்வு. இது போன்ற அனைத்திற்குமான தீர்வாய் ஒன்று வேண்டும். அதற்கான செயலை புரிதலுடன் தொடங்க வேண்டும். அந்த தீர்வை மேற்கொண்டு வெற்றியடைந்த ஒருவரின் வழிகாட்டுதலை கரம்பற்றிக் கொள்ள வேண்டும்.
அந்த புரிதலுக்கான தொடக்கத்துடன் அடுத்த பதிவில்.

சிறிய அளவிலிருந்து வெளியே வந்து பெரிய அளவில் என்ன நடக்கிறது என்று பார்த்தால் குடியுரிமை கேட்டு சிறிதும் மனிதம் இன்றி மக்களை துரத்துவதை பார்ப்பதற்கும், அப்படி துரத்துவதை சரியென்றும், "அவர்கள் 200 ஆண்டுகளுக்கு முன் நமக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று தெரியுமா" என்று வன்மத்தை மனதில் கொண்டு வாதிடும் தெரிந்த முகங்களை பார்க்கையில் கோபம் வருகிறதே.
கல்லூரியில் புகுந்து மாணவர்களை, பெண்கள் என்றுகூட பார்க்காமல் அடித்து வன்முறை செய்தவர்களை எதுவும் செய்யாமல் கடக்கும் அரசும், அதைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் கடக்கும் நாமும், நாளைக்கு இது தான் நமக்கும் நடக்கும் என்பது தெரியாமல் இருப்பவர்களையும், மதம், இனம், மொழி, சாதி, உயர்வு, தாழ்வு என்று மக்களை சாக்கடையில் தள்ளி பிரித்தாளும் சூழ்ச்சி செய்பவர்களையும், அது புரியாமல் சிறு பொது அறிவில்லாமல் உரையாடும் மக்களை பார்க்க கோபம் வருகிறதே. இன்னும் ஆயிரமாயிரம் கோபங்கள்.
கல்லூரியில் புகுந்து மாணவர்களை, பெண்கள் என்றுகூட பார்க்காமல் அடித்து வன்முறை செய்தவர்களை எதுவும் செய்யாமல் கடக்கும் அரசும், அதைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் கடக்கும் நாமும், நாளைக்கு இது தான் நமக்கும் நடக்கும் என்பது தெரியாமல் இருப்பவர்களையும், மதம், இனம், மொழி, சாதி, உயர்வு, தாழ்வு என்று மக்களை சாக்கடையில் தள்ளி பிரித்தாளும் சூழ்ச்சி செய்பவர்களையும், அது புரியாமல் சிறு பொது அறிவில்லாமல் உரையாடும் மக்களை பார்க்க கோபம் வருகிறதே. இன்னும் ஆயிரமாயிரம் கோபங்கள்.
இப்படி வெறும் கோபம் மட்டும் படாமல் அதற்கான தீர்வை நோக்கி அடியெடுத்து வைப்பதே வருங்காலத்தில் இன்னொரு பெண் என்னை போன்று கோபப்படாமல் இருப்பதற்கு தீர்வு. இது போன்ற அனைத்திற்குமான தீர்வாய் ஒன்று வேண்டும். அதற்கான செயலை புரிதலுடன் தொடங்க வேண்டும். அந்த தீர்வை மேற்கொண்டு வெற்றியடைந்த ஒருவரின் வழிகாட்டுதலை கரம்பற்றிக் கொள்ள வேண்டும்.
அந்த புரிதலுக்கான தொடக்கத்துடன் அடுத்த பதிவில்.
No comments:
Post a Comment