மூன்று ஐந்து எட்டாம் வகுப்புக்குகளுக்கு பொது தேர்வாம். கேட்டதிலிருந்து மிக பெரிய கோபமும், வருத்தமும் இருந்து கொண்டே இருக்கிறது.
கோபம் என்னவென்றால் அந்த குழந்தைகளை ஏன் இப்படி வதைக்கிறீர்கள் என்பதே. அவர்களுக்கு தேர்வு என்பதே கொடுமை. இதில் பொதுத்தேர்வு என்பது எவ்வளவு பெரிய வன்மம். இதற்காக அவர்கள் நம்மை மன்னிக்கவே மாட்டார்கள்.
வருத்தம் என்னவென்றால் இந்த தேர்வை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதே. இன்று ஆதரிப்பவர்களுக்கு இந்த தேர்வுகள் இருந்திருந்தால் பாதி பேர்கூட தேர்ச்சி பெற்றிருக்க மாட்டார்கள். இதை ஆதரிப்பதற்கு அற்பத்தனமான காரணங்கள் வேறு.இப்பொழுது இருக்கும் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள், திறமை மிகுந்தவர்கள், கைபேசியெல்லாம் அசால்ட்டாக பயன்படுத்தத் தெரிகிறது என்றெல்லாம் கூறுபவர்களுக்கு இப்பொழுது அவர்கள் இருக்கும் வேலையின் பொருட்டு ஒரு அடிப்படைத் தேர்வு வைத்தால் எல்லாம் தெறித்துவிடுவார்கள்.
இந்த தேர்வுகள் எதை நிரூபிக்க வைக்கப் படுகிறது. அந்த வயதில் தரம் பிரித்து எதை கண்டடைய போகிறீர்கள். இல்லை அந்த வயதில் உங்களால் தான் தரம் பிரிக்க இயலுமா? இந்த வயதில் தேர்வு வைத்து அவர்களுக்குள் மிகப் பெரிய தாழ்வு மனப்பான்மையோ, உயர்வு மனப்பான்மையையோ உருவாக்கப் போகிறீர்கள் தெரியுமா? இதனால் எத்தனை குழந்தைகளுடைய அடிப்படை கல்வி தடைபடும் என்றாவது தெரியுமா?
என்ன மாதிரியான சமூகத்திற்கு இது வித்திடும்? மதிப்பெண் பின்னாடி ஓடும் அடுத்த தலைமுறையை 7 வயதிலிருந்தே உருவாக்குவதற்கா? இந்த உலகில் எதை பற்றியும் கவனிக்காமல், வாழ்க்கையை அனுபவிக்கக் கூட நேரமில்லாமல், சிந்திக்க முடியாமல், பந்தயத்தில் ஓடிக் கொண்டே இருக்கவா? இப்படி அடுத்த தலைமுறை சிந்திக்காமல் வளர்த்தெடுத்தால் தான் எதுவும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்றா?
இவை எதுவும் இல்லாமல் தத்தி தத்தி மெதுவாக கல்வியின் பக்கம் காலெடுத்து வைக்கும் ஒரு சமூகத்தை பிடரியில் அடித்து நீயெல்லாம் படிக்கவே வரக்கூடாது என்று கூறவா? இப்பொழுது தான் படிப்பு, வேலை என்று அடித்தளத்திலிருந்து பெண்கள் வெளியே வரத்தொடங்கி இருக்கும் நிலையில், இந்தத் தேர்வுகள் அவர்களின் பள்ளி படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் அடுப்படிக்கே கொண்டு செல்லாது என்றாவது கூற முடியுமா?
உண்மையிலேயே இந்த தேர்வு முறை எப்படி ஒரு சமூக மாற்றத்திற்கு வித்திடும் என்று யாராவது விளக்க முடியுமா?
இப்பெல்லாம் யாருங்க ஸ்கூலுக்கு அனுப்பாம இருக்காங்க என்று கேட்பவர்களுக்கு இன்றும் பேருந்து போகாத ஊர், அடிப்படை வசதிகள் இல்லாத ஊர், ஓன்றாம் வகுப்பில் படிக்கும் குழந்தை தான் முதல் பள்ளி செல்லும் தலைமுறை என்று இன்றும் இருக்கிறது என்பதாவது தெரியுமா?
நாம் ஏன் இதை பற்றி வாய் திறக்காமல் போய்க்கொண்டிருக்கிறோம்? இதன் வீரியம் புரிந்த ஒரு சிலரே இதை எதிர்த்து கூட்டம் நடத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் மற்றவர்கள்? இதை பற்றி யாராவது விவாதித்தோமா? நமக்கென்ன என்று 9 மணி நேர வேலைக்கு 12 மணி நேரத்துக்கும் மேலாக அடிமையாய் வேலை செய்துவிட்டு அமைதி காக்கிறோம்.
ஆனால் நமக்கு தெரியவில்லை வருங்கால சந்ததிக்கு நாம் மிகப் பெரிய துரோகம் செய்கிறோம் என்று. அவர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக ஆக்கப்பட்டு அவர்கள் 16 மணி நேரம் வேலை பார்க்க வைக்கப் படுவார்கள். எல்லாம் கையை மீறிக் கொண்டு போன பின்பு நம்மை அவர்கள் மன்னிக்க மாட்டார்கள்.
ஏற்கனவே 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு வைத்து அந்த மாணவர்களை கொடுமை படுத்துவது போதாதா? அதுவும் தனியார் பள்ளிகள் நரகத்தை விட கொடுமையானவை. 10 அடி தூரத்தில் பள்ளியிருந்தாலும் விடுதியில் தான் சேர்க்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தி சேர்க்க வைப்பார்கள். அந்த விடுதிக்கு சிறைச்சாலை எவ்வளவோ தேவலாம் என்று தோன்றும் அளவுக்கு கொடுமையை அனுபவிப்பார்கள். நான்கு மணி நேரம் தான் தூங்குவதற்கு அனுமதிப்பார்கள். மீதி நேரமெல்லாம் படிப்பு, படிப்பு என்று உளவியல் ரீதியாக பெரும் பாதிப்பை அடைவதை யாராவது மறுக்க முடியுமா?
நன்றாக படிப்பவர்களின் திறன் கூட இந்த அழுத்தத்தில் குறைந்து விடுவது தான் உண்மை. இல்லையென்று யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்.
நன்றாக உன்னித்துப் பாருங்கள், இந்த மாதிரி மதிப்பெண் பின்னாடி துரத்தி வளர்க்கப்பட்ட தலைமுறை இன்று சமூகத்தில் எப்படி வாழ்கிறார்கள் என்று. அவர்களுக்கு என்று பெரும் கனவுகள் இருப்பதில்லை. அப்படி
கனவுகள் இருந்தால் அது பொருள் சேர்ப்பதை நோக்கியே இருக்கும். மாதம் ஒரு லட்சம் சம்பாதித்தாலும், தான் சந்தோசமாக இல்லை என்று தான் கூறுவார்கள். சமூக அக்கறை இல்லாமலே இருப்பார்கள். அப்படி சமூக அக்கறை இருந்தால் அது பெயர் புகழுக்காக இருக்கிறது.
நான் 6, 7 மற்றும் 8ஆம் வகுப்பில் மூன்று பாடப் பிரிவுகளில் ஒரு முறை கூட 35 மதிப்பெண்கள் பெற்று ரேங்க் வாங்கியது இல்லை. ஆம், காலாண்டு, அரையாண்டு மற்றும் முழாண்டுத் தேர்வு எதிலும் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றதே இல்லை. ஒன்பதாம் வகுப்பில் இருந்து தான் எப்படி படிக்க வேண்டும், தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும் என்றே தெரிந்து கொண்டு அதுவும் 35 லிருந்து 40 க்குள் பெற்று தேர்ச்சி பெறுவேன். இன்று என்னால் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலையில் சேர முடியவில்லையா என்ன?
ஒரு வேலை ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பில் பொதுத் தேர்வு வைத்து நான் தோற்றிருந்தால் என்ன நடந்திருக்கும். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் தையல் வகுப்பில் சேர்க்கிறேன் என்று சொன்ன என் தந்தை பத்து வயதிலேயே தையல் பள்ளியில் சேர்த்து விட்டிருப்பார். பதினெட்டு வயதில் பேசி அப்பாவுக்கு புரிய வைத்ததை பத்து வயதில் செய்திருக்க முடியாமல் இன்று என் வாழ்க்கை திசை மாறியிருக்கும். என் குடும்பம் இன்றும் அடி மட்டத்தில் தவித்துக் கொண்டிருந்திருக்கும்.
மதிப்பெண் குறைவால் குழந்தைகள் சந்திக்க நேரிடும் அவமானங்கள் அதிகமாக இருக்கும். தன் சொந்த வீட்டிலேயே ஒப்பிட்டு பேசுவது மிக அதிகமாகும். இதனால் ஒப்பிட்டு பேசப்படும் நண்பன் மீது கூட ஒரு வெறுப்பு உருவாகும். நானே இதை அனுபவித்துள்ளேன். பத்தாம் வகுப்பில் என்னை விட அதிகமாக மதிப்பெண் எடுத்த நண்பர்கள், உறவின் சகோதர, சகோதரிகள் மீது ஏனோ புரியாத வெறுப்பு உருவானது. அவர்களிடம் பேசும்போது என்றும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து கொண்டே இருந்தது நான் வேலைக்கு சென்று சேரும் வரை. இது ஒரு வெறுப்பு சமூகத்தை உருவாக்காதா?
செல்போன் பயன்படுத்தத் தெரிகிறது, துரு துருவென்று இருக்கிறார்கள், அவர்களுக்கு தேர்வு வைத்தால் அவர்கள் திறமை மேம்படும் என்று சொல்பவர்களை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. குழந்தைகள் எல்லாவற்றிலும் ஆர்வம் உள்ளவர்கள். அவர்களுக்கு எல்லாமே புதிது. அதனால் அனைத்தையும் அவர்கள் ஆராய்ந்து கொண்டே இருப்பார்கள். புதியதாய் இருக்கும் ஒவ்வொன்றையும் சோதனை செய்துகொண்டே இருப்பார்கள். அதை வைத்து தேர்வு வைக்க வேண்டும் என்று சொல்வது வேடிக்கையாய் இல்லையா?
அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு செயல் முறை கல்வி அளித்தால் ஒழிய ஒரு நல்ல சமூகத்தை உருவாக்க முடியாது. செயல்முறைக் கல்வி சிந்திக்க கற்றுக்கொடுக்கும். கற்பனைத் திறனை வளர்த்தெடுக்கும். மதிப்பெண் மட்டுமே குறியாக வளரும் தலைமுறை அடுத்தவர்களிடம் அடிமையாகவே வேலை பார்ப்பதற்காக உருவாக்கப் படும் தலைமுறை. தனக்கென சொந்த கருத்து இல்லாமல், அறிவார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட முடியாமல் அடிமைச் சமூகமாகவே வளர்ந்து வாழ்ந்து இறக்கும்.
குழந்தைகளை குழந்தைகளாய் இருக்க விடுங்கள்.

ஒரு விதையை மண்ணில் இட்டதும் அது துளிர்கிறதா என்று அவ்வப்போது எடுத்து பார்ப்பதற்கு சமம் இத்தகைய தேர்வு. வளர்வதற்கான சூழலில் தான் கவனம் செலுத்த வேண்டுமே தவிர சோதிப்பதில் அல்ல. சோதனைகள் என்றும் சுயபரிசோதனைகளாக இருக்கும்பட்சத்தில் தான் ஆரோக்கியமான வளர்ச்சியை தரும். ஒப்பிடுதலுக்கு மட்டுமே வழிவகுக்கும் இத்தகைய தேர்வுகள் தன்னை சுயபரிசோதனைக்கு உட்படுத்தவே தயங்கும் ஒரு மனப்பான்மையைத் தான் மாணவர்களிடத்தில் உருவாக்கும். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு நட்சத்திரம்.
ReplyDelete