கடந்த வாரம் வரை உள்ளாட்சி தேர்தல் நடந்து வந்த நிலையில் அதன் முடிவுகளை பார்த்துக் கொண்டிருந்தேன். வேட்பாளர்களின் பெயர்களில் பெரும்பாலும் பெண்கள் பெயரையே அதிகமாக கேள்விப்பட்டேன். சரி இந்த தேர்தலில் பெண்களின் இட ஒதுக்கீடு எவ்வளவு என்று தேடினால் 50 சதவீதம்.
2016 ஆம் ஆண்டு 33 சதவீதமாக இருந்த பெண்களுக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. இதையே இப்பொழுதுதான் நான் தெரிந்து கொள்கிறேன். சரி நல்லது தானே பெண்களுக்கு அதிக இட ஒதுக்கீடு.
அட போங்கப்பா. என்ன தான் அதிக இடத்தை பெண்களுக்கு கொடுத்தாலும், அந்த பதவியில் இருந்து ஆள்பவர்கள் ஆண்கள் தான். 90 சதவீத பெண் வெற்றியாளர்களை வைத்து அங்கே ஆள்வது அந்த பெண்ணின் கணவனோ, தந்தையோ, அண்ணன்/தம்பிகளோ வாகத் தான் இருப்பார்கள். இது தான் நிதர்சனம்.
இங்கே ஆண்களால் தான் எல்லா காரியங்களையும் செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கை வேரூன்றி கிடக்கிறது. அதனால் தான் எந்த பெண் வேட்பாளர்களின் பின்னால் வலுவான ஆண்கள் இருக்கிறார்களோ அவர்களுக்கு வெற்றி அதிகமாக இருக்கிறது. வலுவான ஆண்கள் பின்னணி இல்லாத பெண்கள் சுலபமாக தோற்கடிக்கப் படுகிறார்கள். வார்டு கவுன்சிலர் போட்டி வரை இது தான் நிலை.
முக நூலில் பார்க்கிறேன். ஒரு 21 வயது இளம் பெண் பஞ்சாயத்து தலைவர் போட்டியில் வென்று விட்டார் என்று அனைவரும் பெருமையாக பகிர்கிறார்கள். நன்றாக பார்த்தால், அந்த பெண்ணின் பின்னால் வலுவான அரசியல் அல்லது குடும்ப பின்னணி இருக்கும். அங்கே அவளின் பதவியில் ஆளப்போவது ஒரு ஆண் தான். இதில் பெருமை கொள்ள என்ன இருக்கிறது.
பெண் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதே அவர்களின் கணவன் அல்லது தந்தை ஏற்கனவே அரசியலில் இருப்பவர்கள் அல்லது தேர்தலில் நின்றவர்களாகத் தான் இருப்பார்கள். பெண்கள் தொகுதியாக மாற்றப் பட்டால் உடனே தன் குடும்பத்தில் உள்ள பெண்களை நிற்க வைத்துவிடுவார்கள்.
அதையும் மீறி ஒரு பெண் தானாக முன்வந்து தேர்தலில் நின்றால், அவர்கள் சுலபமாக தோற்கடிக்கப்படுவார்கள். தன்னை ஆள பெண்களை அனுமதிக்கும் அகங்காரமற்ற ஆண்கள் மிக குறைவு தான். தன்னை போன்ற ஒரு பெண் தன்னை ஆள்வதை ஆதரிக்கும் பொறாமையற்ற பெண்களும் மிக மிகக் குறைவு தான். நம்மூரில் ஆண்களை எதிர்ப்பதற்கு மட்டும் தான் பெண்ணியம்.
ஆண்களுக்கு தாங்கள் சரி சமம் என்று சண்டை போட்டு தன் சக்தியை வீணடிக்காமல், ஆக்கும் திறன் கொண்ட தன்னால் அனைத்தும் சாத்தியம் என்று பெண்கள் உணர்வதே மிகப்பெரிய ஆக்கம்.

No comments:
Post a Comment