கடந்த இரண்டு நாட்களாக ஏனோ காந்திஜியின் நினைவும், குறிப்பாக காந்திஜியின் இறுதி 200 நாட்கள் புத்தகமும் நினைவிற்கு அதிகமாக வந்து வந்து சென்றது. புத்தகத்தை ஏனோ எடுத்து புரட்டிப் பார்க்க வேண்டும் என்று உள்ளுணர்வில் தோன்றிக் கொண்டே இருந்தது. அது ஜூலை 15ஆம் தேதிக்காக தான்.
இந்த புத்தகத்தை 2019ல் குக்கூ காட்டுபள்ளி நூலகத்திலிருந்து எடுத்துச் சென்றிருந்தேன். ஒரு மனிதனின் அதுவும் மிகப் பெரிய செயலாற்றிய ஒரு மாபெரும் தலைவரின் கடைசி 200 நாட்கள் அன்றாட வாழ்க்கை எப்படி இருந்தது என்று தெரிந்து கொள்ள மிகப் பெரிய ஆர்வம் இருந்தது.
காந்தியைப் பற்றி அதிகமான எதிர்மறை எண்ணங்களுடன் வளர்ந்த எனக்கு காந்தியத்தில் பெரிய ஈடுபாடு இல்லாமல் இருந்தது. காந்தியைப் பற்றி அறிந்த கொள்ள எந்த முயற்சியும் எடுத்ததில்லை. ஆனால் "இன்றைய காந்திகள்" புத்தகத்தை வாசித்து சாட்சியங்களை அறிந்த பிறகே நான் காந்தியை அறியத் தொடங்கினேன்.
அதன் பிறகு தான் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று எடுத்து வந்தேன். வாசிக்கத் தொடங்கிய பிறகு தான் அவருடைய கடைசி 200 நாட்கள் பற்றி எனக்கு புரிந்த வகையில் தினமும் எழுத வேண்டும் என்று தோன்றியது. நான் அறிகின்ற காந்தியை என்னை போல் வெறுத்தவர்களும், வெறுப்பவர்களும் அறிய வேண்டும் என்று தோன்றியது.
காந்தியை அறிந்தால் நாம் வெறும் வாய் போராளிகளாகவும், முகநூல் வாட்ஸாப் போராளிகளாகவும் இல்லாமல் உண்மையான மாற்றத்திற்காக செயல்படும் செயல்வீரர்களாக மாற்றம் அடைவோம் என்பதே நான் உணர்ந்தது.
அவருடைய கடைசி 200வது நாள் ஜூலை 15, 1947ல் தொடங்குகிறது. நான் தினமும் அவருடைய நாள் எப்படி இருந்தது, அதில் நான் அடைந்தது, கற்றது, புரிந்தது என்ன என்பதை பகிர வேண்டும் என்று கடந்த வருடம்
நவம்பரில் முடிவு செய்தேன். அதுவும் ஜூலை 15ல் இருந்தே தொடங்க வேண்டும் என்று காத்திருந்தேன்.
இந்த சூழலில் தேதியை மறந்துவிட்டிருக்கிறேன். இதனால் தான் இரண்டு நாட்களாக உள்ளுணர்வு வேலை செய்து எனக்கு அதை நியாபகப் படுத்தியிருக்கிறது. உள்ளுணர்வை கொண்டு செய்யும் எந்த செயலும் நமக்கான செயலாக, நம் ஆன்மாவிற்கான செயலாக இருக்கும். இனி தினமும் காந்தியின் கடைசி 200 நாட்களுடன் நாமும் 200 நாட்கள் பயணிப்போம்.

No comments:
Post a Comment