இன்றைய நாள் பல சோக நிகழ்வுகள் காந்திஜிக்கு காத்திருந்தது. எந்தவொரு நிலையிலும் அவர் கருணை நிறைந்த ஒளி தோன்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.
பர்மாவின் விடுதலைக்காக போராடிய அவரது நண்பர்கள் ரங்கூனில் படுகொலை செய்யப்பட்டது அவரை வெகுவாக அழுத்தியது. பர்மாவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே மோசமான நிகழ்வு இது. இது போன்ற வெறித்தனமான வன்முறைகள் தவிக்கப் படவில்லையென்றால் மனித இனத்தின் எதிர்காலம் மோசமாகும் என்று அவர் வருத்தப் பட்டார்.
இதிலிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இந்த மாதிரியான ரத்த வெறி கொண்ட தாக்குதல்கள் அரசியல் காரணங்களுக்காவே நடக்கின்றன என்றார். இது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். "இக் கொலைகளை செய்தவர்கள் மனந்திருந்துவதற்கு இறைவன் அருள் புரியட்டும்" என்று கூறுவதிலிருந்து அவர் தீமை செய்தவரைக்கூட வெறுப்பதில்லை.
மாறாக அவர்கள் மனம் திருந்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு வரும். வேறு யாராக இருந்தாலும் வன்மத்தை தான் வெளிப்படுத்தியிருக்க முடியும்."உலகிற்கு இன்று தேவைப்படுவது கத்தியும், துப்பாக்கியும் அல்ல. நியாயங்களை புரிந்து கொள்வதற்கு ஏற்ற உண்மையான மனமாற்றமே." என்ற உண்மையை அவர் அறிந்திருந்தார்.
ஒரு நாட்டில் மிகப் பெரிய மாற்றம் போரின் மூலமோ, அடக்குமுறைகள் மூலமோ நடந்துவிடாது. அப்படி நடந்தாலும் அது வெகுகாலம் நிலைத்து நிற்காது. இதில் உயிர்பலிகள் அதிகமாக கொடுக்க வேண்டியிருக்கும். ஒட்டுமொத்த மக்களின் புரிந்துணர்வால் வரும் எழுச்சியினால் தான் நிலைத்த மாற்றம் உருவாகும். அதுவே மனித இனத்திற்கு நன்மை விளைவிக்கும். இது தான் காந்தியின் புரிந்துணர்வு. இதை தான் அந்த மகாத்மா இந்திய சுதந்திர போராட்டத்தில் கையாண்டார்.
அஹிம்சையை விடுத்து ஆயுதங்கள் ஏந்தியிருந்தால் நாம் அழிக்கப்பட்டிருப்போம். ஈழம் போல. உயிர்பலி வெகு குறைவாக சுதந்திரம் பெற்றது அஹிம்சையில் தான். அவருடைய ஒவ்வொரு போராட்ட முறைகளும் ஆயுதங்களை விடவும் வீரியமானது. அஹிம்சையில் போராட மிக அதிக வலிமை வேண்டும்.
ஒருவர் நம்மை எதிரியாய் பாவிக்கும்பொழுதும், நம்மை அடிமையாய் நடுத்துபவர்களை எதிர்த்து போராடும்பொழுதும் நாம் சிறிதும் மனம் கலங்காது அவர்களுடனேயே துளியும் வெறுப்பில்லாமல் உரையாட வேண்டும். நம் மீது வெறுப்பு கக்கினாலும் அவர்களுக்காக சேர்த்தே போராடுவது காந்தியத்தில் தான் சாத்தியம் என்பேன்.

No comments:
Post a Comment