இருள் விலகாத காலைப் பொழுதில் அந்த 78 வயது இளைஞர் எப்பொழுதும் போல சுறுசுறுப்புடன் வேலைகளைத் தொடங்கினார். காலை சரியாக 4.15 மணிக்கு கடிதங்கள் எழுதத் தொடங்கிவிட்டார். தனது பேத்தியான மீராவின் கடித்ததிற்கு பதில் எழுதுவதில் தானும் ஒரு குழந்தையாய் மாறி அவளுடைய பருவத்திற்கே சென்று கடிதம் எழுதினார். 60 வயதை குறைத்துக் கொண்டு அவளின் இடத்தில் இருந்து அவள் முறையிட்டிருந்த நிகழ்வுக்கு பதில் எழுதுகிறார்.
அவருடைய அறிவுரைகள் அவர் பேத்திக்கு மட்டுமல்ல இவ்வுலகின் அனைவருக்கும் தான். "சீதா, ஏன் அவ்வளவு சீக்கிரத்தில் மனதளர்ந்து போகிறாய்? உனது சுயமரியாதையை எவரும் காயப்படுத்தி விடவில்லை. நீ அமைதியுடன் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உனது உடல் வலிமையை வளர்த்துக்கொள். எல்லா விதிகளையும் கவனத்துடன் பின்பற்று. தொடர்ந்து கடிதம் எழுது." என்று அவளை வலிமை பெற வைக்கிறார்.
நல்ல வாழ்க்கை என்பதை சிறந்த முறையில் வாழ்ந்து காட்டி வருபவர் அல்லவா? நவகாளியில் பிரிவினை வன்முறைக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட துணை நிற்கும் பொழுதும் சரி, லண்டனுக்கு பிரிட்டிஷ் அரசரை சந்திக்க தன்னுடைய கிராமவாசி உடையில் சென்றபோதும் சரி, தண்டி மண்ணில் ஒரு நியாயமற்ற சட்டத்தை மீறும்போதும் சரி எல்லோருக்கும் முன்னோடியாக வாழ்ந்து காட்டியவர் அவர்.
"உன் உடல்நலத்தை வலிமையுடன் பராமரித்துக்கொள். மனதை தெளிவாக வைத்திரு. உணர்ச்சி வசப்படாதே. கட்டுப்பாட்டுடன் செயல்படு. மற்றவர்கள் சொல்வதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் எது சரியானதோ அதன்படி நடந்துகொள். அதுதான் சரியான கட்டுப்பாடு மிக்க வாழ்க்கையின் ரகசியம். கட்டுப்பாட்டுடன் செயல்பட முடியாதவர்கள் இறுதியில் உபயோகமற்றவர்களாக மாறி விடுகிறார்கள்."
இந்திய இளைஞர்கள் சரியான பாதையில் சென்று தங்களை வளர்த்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். இளைஞர்கள் தாய் நாட்டிற்கும் உலகத்துக்கும் சேவை செய்ய வேண்டும் என்பதே அவர் விருப்பமாக இருந்தது. அதற்கான முறையான, தரமான கல்வியை அவர்கள் பெற வேண்டுமென்று எண்ணினார். அது யாருடைய கடமை என்பதில் தெளிவாக இருந்தார்.
மக்களே முன்வந்து ஒன்றுபட்டு ஒரு இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும். இந்தியாவின் கல்வித் தேவையை அந்த இயக்கம் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் அரசாங்கம் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து பல்கலை கழகங்கள், கல்விச் சாலைகள் அமைக்க வேண்டும். உலகத் தரமான பல்கலைக்கழங்கள் இந்தியாவில் நிருவப் பட வேண்டும் என்றார்.
காந்தியின் கருத்தியல் எல்லாவற்றிலும் உண்டு. அதில் கல்விக்கான அவரின் கருத்து முக்கியமானதாக எனக்கு தோன்றுகிறது. நாம் மேற்கத்திய கல்வி முறையை அச்சு பிசகாமல் இந்தியாவில் பின்தொடருகிறோம். ஆனால் அந்த கல்வி முறை நம் மண்ணிற்கு ஒத்து வராது. இம்மண்ணிற்கான கல்வி முறையை நாம் கண்டடைய வேண்டும் என்று காந்தி கூறினார்.
அதில் ஆராய்ந்து உருவாக்கியது தான் நையித்தாலிம் பள்ளி. நையித்தாலிம் கல்வி முறை தான் நாம் பின்பற்ற வேண்டிய ஒன்றாக எனக்குத் தோன்றுகிறது. அதாவது செயல் முறைக் கல்வி. இந்த முறை கல்வி, யாரிடமும் நம்மை அடிமை படுத்தாமல், இன்னொருவரின் கீழ் வேலை செய்யும் அடிமை வேலையிலிருந்து சொந்த தொழில் அல்லது வேலை போன்றவற்றை அடிப்படையிலே கற்றுக் கொடுத்துவிடும்.
ஆம் பயன்படாத பாடத்தை 20 வருடமாக கற்று இன்னொருவரின் மூளையில் உதிக்கும் எண்ணங்களுக்கு எடுபிடி வேலை செய்துகொண்டிருக்கிறோம். இந்தியாவின் தொழில் பின்புலத்தைப் பார்த்தாலே நம் கல்வியின் தரம் தெரிந்துவிடும். ஆம் இன்று மேலோங்கி இருக்கும் புதிய தொழில்நுட்ப நிறுவனங்களில் நாம் வேலை செய்கிறோமே தவிர நம்மால் புதிய கண்டுபிடிப்புகளையோ, ஆராய்ச்சிகளையோ உலக அளவில் செய்ய முடியவில்லை என்பதே நிதர்சனம்.
ஏன்னென்றால் நாம் சிந்திக்கும் திறன் இக்கல்வியால் இழந்து விட்டோம். இதை அன்றே கணித்தார் காந்தி. அதனால் தான் செயல்முறைக் கல்வியை அவர் பரப்ப வேண்டும் என்று எண்ணினார். உலக அளவில் மக்கள் தொகையில் இரண்டாம் இடமான இந்தியாவில் எத்துனை கண்டுபிடிப்புகள் உலக அளவில் இருக்கின்றது என்பதற்கு பதிலே நாம் மாற்றுக் கல்வியில் காந்தியை பின்பற்ற தவறிவிட்டோம் என்பதையே காட்டுகிறது.

No comments:
Post a Comment