ஸ்ரீநகரில் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப் பட்டிருந்தது. அதனால் காந்திஜியின் மாலைப் பிரார்த்தனைக் கூட்டம் நடத்த முடியாமல் இருந்தது. பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ள மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கூடினர். ஆனால் என்றும் சட்டத்தை தீவிரமாக மதிக்கும் காந்திஜி "பொதுப் பிரார்த்தனை நடத்த நான் விரும்புகிறேன். ஆனால் அதிகாரிகள் அனுமதி அளிக்க மறுக்கும்போது அதனை நடத்த நான் விரும்பவில்லை. எனது பிரார்த்தனை வேண்டும் என்று கேட்டு கூட்டம் வலியுறித்தினால் அரசிடம் முறையான அனுமதி பெறுங்கள்" என்று கூறினார்.
பின் அவர் சில அமைப்புகளிடம் "காஷ்மீர் மக்களையும், பேகம் ஷேக் அப்துல்லாவையும் காண்பதற்கு தான் காஷ்மீர் வந்தேன். ஷேக் அப்துல்லா ஒரு அறவழி போராளி. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சண்டையை மூட்டி வரவில்லை. பாகிஸ்தான் என்ற தேசம் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டது. எனவே மேலும் சண்டைக்கான காரணம் இல்லை." என்று அவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
மக்களின் வலுவான வேண்டுகோளுக்காக காஷ்மீர் பிரதமர் கக் பிரார்த்தனை கூட்டங்களுக்கு விலக்கு அளித்தார். இதனால் நகரம் திருவிழாப் பூண்டதுபோல் காணப்பட்டது. காஷ்மீரில் காந்திஜியின் முதல் பிரார்த்தனைக் கூட்டம். 20000 மக்கள் கலந்து கொண்ட மிகப்பெரிய கூட்டமாக அது இருந்தது. பிரார்த்தனை கூட்டத்தில் புனித குரானின் செய்யுள் வரிகள் சிலவற்றை பேகம் அப்துல்லா பாடினார். பின் மனுகாந்தியும் டாக்டர்.சுசீலா நய்யாரும் பகவத் கீதையிலிருந்து சில சுலோகங்களை தேர்வு செய்து இனிய குரலில் பாடினார்கள். பார்சி மொழியின் புனித நூலான ஜென்ட் அவஸ்தாவிலிருந்து சில வரிகள் பாடப்பட்டன.
கோடை மழை தொடங்கியதால் காந்திஜிக்கு ஜலதோஷம் பிடித்திருந்தது. இருந்தாலும் அவர் அதிகாலை 3 மணிக்கே எழுந்து அவரது வேலைகளை தொடங்கிவிட்டார் எப்பொழுதும் போல. இன்றைய நாள் பிரதமர் கக் அதிகாலையிலேயே காந்திஜியை சந்திக்க வந்திருந்தார். ஒரு மணி நேர உரையாடலுக்கு பிறகு கக் மஹாராஜாவையும் ராணியையும் அரண்மனையில் சந்திக்க செய்திருந்த ஏற்பாடுகளை விளக்கிக் கூறினார். மகாராஜாவை சந்திப்பதற்கான வாய்ப்பை காந்திஜி பயன்படுத்திக் கொண்டார்.
அன்று மாலை பேகம் அப்துல்லாவை சந்திக்க அவரது இல்லத்திற்குச் சென்றிருந்தார். சிறையில் வாழும் ஷேக் அப்துல்லாவிற்காக அவரது மனைவியிடம் வருத்தம் தெரிவித்தார். அவர் படும் துன்பங்களுக்கும், ஒடுக்கு முறையும் வீண் போகாது என்று ஆறுதல் கூறினார். "எந்த அறப் போராட்டக் காரரையும் எந்த காலத்திலும் தோற்கடிக்க முடியாது" என்று உறுதிப்படக் கூறினார் காந்திஜி.
No comments:
Post a Comment