தனது 77 வயதிலும் ஓய்வு இல்லாமல் மக்களுக்காக பயணித்துக் கொண்டே இருக்கிறார். நேற்றைய தினம் லாகூர் வந்தடைந்த காந்திஜி திருமதி.ராமேஸ்வரி நேரு அவர்களின் வீட்டில் தாங்கினார். அனைவரும் உறங்கும் இரவு வேளையிலும் கூட அவர் மனது தேடுதல் பணிக்கு தயாராகிக் கொண்டே இருக்கிறதே தவிர அவர் சிறிது நேரம் கூடத் தூங்கவில்லை.
பழமை வாய்ந்த லாகூர் நகர மசூதியின் தொழுகை அழைப்பு ஒலியை எழுப்புவதற்கு முன்னமே காந்திஜி எழுந்து தனது வேலைகளை தொடங்கியிருந்தார். பிரார்த்தனைகளை முடித்துக்கொண்டு கடிதங்களை எழுத ஆரம்பித்தார். அவர் தன் நண்பரான வல்லபாய் படேலுக்கு இரண்டு கடிதங்களை எழுதினார். காந்திஜி மனம் திறந்து உரையாடும் சிறந்த உறவாக இருந்தது படேல் ஆவார்.
ஒரு கடிதத்தில் "வா அகதிகள் முகாமில் இருக்கும் மக்கள் வெளியேற்றப் படக் கூடாது. இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் வாழ்க்கை ராவல்பிண்டியிலேயே அமைய வேண்டும். இது தொடர்பாக நீங்கள் பாகிஸ்தான் அரசுக்கு தகவல் அனுப்ப வேண்டும். இன்று மாலை பயணத்தை தொடங்கி ஒரு நாள் பாட்டனாவில் தங்கிவிட்டு பின் கல்கத்தா சென்று அங்கிருந்து நவகாளிக்கு செல்கிறேன். சுசீலா நய்யார் வா முகாமில் தங்கவிட்டு வந்துள்ளேன். மக்கள் மிகுந்த பீதியுடன் காணப்பட்டனர். அதற்கான அவசியமில்லை என்று நினைக்கிறேன்" என்று எழுதியிருந்தார்.
மற்றொரு கடிதத்தில் படேலுக்கு பீகாரை சேர்ந்த முஸ்லீம்களை அதிகாரிகள் துன்பப் படுத்துகிறார்கள் என்ற புகார் வந்துள்ளது. அந்த அதிகாரிகளை விசாரணை செய்து மக்களின் குறைகளை போக்க வேண்டுமென காந்திஜி படேலிடம் வலியுறுத்தி எழுதியிருந்தார்.
இந்திய தேசிய காங்கிரஸின் மூவண்ணக் கொடியில் கை ராட்டையின் சின்னம் வரையப்பட்டிருந்தது. ஆனால் இந்திய தேசியக் கொடி வரையும் குழு ராட்டையை விடுத்து தர்ம சக்கரத்தை வரைந்தது. இந்த புதிய சக்கரம் கை ராட்டையில் உள்ள சக்கரத்தையும் அடையாளப்படுத்துகிறது என்று காந்திஜிக்கு விளக்கம் அளிக்கப் பட்ட போதும் அவர் அதை ஏற்க மறுத்தார். அவர் என்றும் ராட்டையானது தேக ஆரோக்கியமுள்ள ஒவ்வொரு மனிதனும் தினமும் உண்மையுடன், பக்தியுடன் செய்ய வேண்டிய ஒன்று என்று எண்ணினார்.
இந்திய யூனியனின் கொடியில் கைராட்டை இல்லையென்றால் நான் அதை வணங்க மறுத்துவிடுவேன் என்று லாகூர் காங்கிரஸ் ஊழியர்கள் அவரை சந்தித்த பொழுது கூறினார். "கைராட்டை இல்லாத தேசியக் கொடியை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. கொடியிலுள்ள சக்கரம் கைராட்டையும் அடையாளப் படுத்துகிறது, வேறு சிலர் அதை சுதர்சன சக்கரம் என்றும் கூறுன்கின்றனர். கைராட்டை என்பது அமைதியான உடல் உழைப்பின் அடையாளம், சுதர்சன சக்கரம் என்பது வன்முறையின் அடையாளம். தீயதை அழித்து நல்லதை செய்யும் என்றாலும் அது வன்முறையைத் தான் முன்னிறுத்துகிறது." என்று அவர் கருதினார்.
புதிய பாகிஸ்தானின் தேசியக் கொடியப் பற்றியும் காந்திஜி பேசினார். அனைவருக்கும் சமவுரிமைகள் வழங்குவதையும் அந்த நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை அளிப்பதையும் உறுதி செய்யும் வகையில் பாகிஸ்தானின் தேசியக் கொடி அமைக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொண்டு மரியாதை அளிக்கலாம் என்றார்.
லாகூர் பயணம் முடிவுக்கு வந்து அவர் கல்கத்தா மெயில் மூலம் பயணத்தை தொடங்கினார். ரெயில் ஏறும்போது " சோதனையொன்று நம் அனைவரையும் விரைவில் எதிர்கொள்ளக் காத்திருக்கிறது. அதனைச் சந்திக்க நீங்கள் தயாராக வேண்டும். உங்களால் முடிந்தவரை தூய்மைக்கான பயிற்சிகளில் ஈடுபடுங்கள்" என்று கூறினார்.
அமிர்தரஸ் ரயில் நிலையத்தில் வண்டி நின்றபொழுது அவரைக் காண மக்கள் பெரும் ஆர்வம் காட்டினார்கள். ஒரு வாரத்திற்கு முன்பு அதே ரயில் நிலையத்தில் அவருக்கு கருப்புக் கொடிகள் காட்டப்பட்டது. ஆனால் அவர் ஸ்ரீநகரில் ஆற்றிய பணிகளைப் பற்றிய செய்திகள் காந்திஜி வரும் முன்னமே அங்குள்ள மக்களுக்கு வந்தடைந்துள்ளது.
அது அற்புதமான மாற்றத்தை அங்குள்ள மக்களின் மனதில் ஏற்படுத்தியிருந்தது. அவர்கள் கடந்த வாரம் நடந்துகொண்டதிற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். அவரை வரவேற்று அனைவரும் பெரிதாய் முழக்கங்கள் இட்டனர். சில இளைஞர்கள் ஆர்வமுடன் அவரது கைப்பையை வாங்கிக்கொண்டனர். அதில் நிதி வசூல் செய்து ஹரிஜன் பத்திரிக்கைக்கு அளிக்கவுள்ளதாக கூறினார்கள்.
அவரின் நான்கு நாட்கள் பயணம் சூழ்நிலையையே மாற்றி விட்டது என்று அவர்கள் கேட்டதற்கு "கடந்த காலத்தை மறந்து விடுங்கள். தினமும் தூங்கி எழுந்தவுடன் ஒரு புதிய நாள் துவங்குகிறது. நாம் அனைவரும் இப்பொழுது விழித்துக் கொள்வோம்" என்று கூறி அவரது பயணத்தைத் தொடர்ந்தார் மகாத்மா.
No comments:
Post a Comment