இன்றைய நாள் மவுனத்திற்கான நாள். ஆம் வாரத்தில் ஒரு நாள் காந்திஜி மவுனத்தை கடைபிடிப்பார். அவர் அந்நாள் முழுவதும் யாருடனும் உரையாட மாட்டார். ஓர் உறுதியான முறையான கட்டுப்பாட்டுக்குத் தன்னை உட்படுத்திக் கொள்வதற்காக அவர் வகுத்திருந்த பல நடவடிக்கைகளில் ஒன்று தான் வாரம் ஒருநாள் மவுனத்தை கடைபிடிப்பது. அதற்காக அவர் திங்கட்கிழமையை தேர்ந்தேடுத்திருந்தார்.
ஒரு மனிதன் தன்னை மிகப்பெரிய செயலுக்கு உட்படுத்துகையில் அதற்கு எல்லா வகையிலும் தன்னை தயாரித்துக் கொள்ள வேண்டும் என்பதை நான் இங்கே புரிந்துகொள்கிறேன். பல நாள் சிந்தித்து இருக்கிறேன் இவர் எவ்வாறு இப்படி பலமாக போராடுகிறார் என்று. தன் முடிவில் பின்வாங்காமல் ஒரு மிகப் பெரிய ஆதிக்க அரசுக்கு எதிராக சிறிதும் சஞ்சலமின்றி திடமாக எப்படி போராட முடிகிறது என்று தோன்றிக் கொண்டே இருந்தது.
ஒரு நாள் உண்ணா விரதம் கூட நமக்கு ஆயிரம் முறை உணவை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. ஆனால் இவர் எப்படி சிறிதும் சஞ்சலமின்றி ஒவ்வொரு உண்ணாவிரத போராட்டங்களையும், மற்ற போராட்டங்களையும் செய்தார் என்ற என் கேள்விக்கு இன்று தான் பதில் கிடைத்தது. அவர் தன்னை எல்லா வகையிலும் தயார் படுத்திக் கொண்டே இருந்திருக்கிறார். தன்னை கடுமையாக்கிக் கொண்டே வந்திருக்கிறார்.
இன்றைய நாள் தன்னை சந்திக்க வந்தவர்களிடம் எதுவும் உரையாட முடியாமல் ஆனால் அனைவருக்கும் தன் எழுத்து மூலம் உரையாடினார். இவ்வாறு மவுனம் இருக்கும் சமயத்தில் அவர் மற்றவர்களின் உரையாடல்களை நல்ல முறையில் கூடுதல் கவனமாக கேட்பார். அவ்வாறு கவனிப்பதன் மூல தன்னுடைய பதில்களை முழுமையாக மனதில் வடிவமைத்துக் கொண்டு உரிய விளக்கங்களை அளிக்க முடியும்.
காஷ்மீருக்கு செல்லலாமா வேண்டாமா என்று அவர் முடிவெடுக்காமல் புதிராய் இருந்து வந்தது. இந்நிலையில் அவர் மவுண்ட்பேட்டன் பிரபுவிற்கு கடிதம் எழுதுகிறார். அதில் தான் காஷ்மீர் செல்ல சில சிக்கல்கள் இருப்பதால் தானே செல்ல முடிவெடுத்துள்ளதாக நேற்றிரவு நேரு கூறியிருக்கிறார் எனவும் அதனால் தான் இப்பொழுது பீஹாருக்கும், நவகாளிக்கும் செல்ல எந்த தடையும் இல்லை என்றும் அங்கு செல்வதற்கு இரண்டு நாட்கள் முன் பஞ்சாபிற்கு செல்வேன் மற்றும் நீங்கள் தன்னை சந்திக்க விரும்புகிறீர்கள் என்பது தொடர்ந்தால் நாளை சந்திக்கலாம் என்றும் கடிதம் எழுதினார்.
அதற்கு மவுண்ட் பேட்டன் பிரபு உடனடியாக பதில் எழுதியிருந்தார். "இந்தியாவைச் சேர்ந்த எந்த அரசியல் தலைவர்களும் காஷ்மீருக்கு வருவதை தான் விரும்பவில்லை என்று காஷ்மீர் பிரதமரான திரு.கக் தெரிவித்ததாக அறிகிறேன். அவர் நேரு வருவதை விரும்பாமல் தான் இவ்வாறு கூறியிருக்கிறார். பண்டித நேரு காஷ்மீருக்குள் வந்தால் வகுப்புவாத வன்முறை பஞ்சாபின் எல்லை வழியாக காஷ்மீருக்குள் பரவிவிடும் என்று காஷ்மீர் நிர்வாகம் அஞ்சுகிறது. அதனால் நேருவிற்கு பதிலாக காந்திஜியே வர வேண்டும்" என்று எழுதியிருந்தார்.
இதனால் என்ன செய்வதென்று காந்திஜி குழம்பி இருந்தார். அவர் படேலிடம் என்ன செய்வது. நான் குழம்பியிருக்கிறேன் என்று வெளிப்படையாக முடிவெடுக்கும் உதவியை கோரினார். அகங்காரம் இல்லாமல் உதவி கேட்பது செயல் மனிதர்களின் மனம்.
இந்தியாவைப் பிரிப்பது. பாகிஸ்தானை உருவாக்குவது ஆகியவை காந்திஜியின் எண்ணத்துக்கு மாறாக "நம் தலைவர்கள்" எடுத்த முடிவாகும். இதைப் பற்றி அவர் சுசீலா பாய்க்கு எழுதிய கடிதத்தில் "பாகிஸ்தான் பற்றிய முடிவுகள் உண்மையில் தவறானது தான். ஆனால் யாருக்கு எதிராக நான் போராடுவது? என்ன நோக்கத்திற்காக போராடுவது?" என்று காந்திஜி கேள்வி எழுப்பியிருந்தார்.
காந்தி தான் பாகிஸ்தானை பிரித்துக் கொடுத்தார் என்று சிறுவயதிலேயே எனக்கு பொய்தரவுகள் தரப்பட்டு அவர் மீது வெறுப்பை ஊற்றியிருந்தார்கள். ஆனால் அவருக்கு பிரிவினையில் சிறிதும் விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறது. ஏன் அவர் மீது நமக்கு வெறுப்பு வரவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று சிந்துத்துப் பார்த்தாலே காந்தியடிகளின் செயல் புரிந்துவிடும்.

![]() |
லார்ட் மவுண்ட் பேட்டனுடன் காந்திஜி |

No comments:
Post a Comment